களைகட்டிய நாகை மீன்பிடி துறைமுகம்...

கார்த்திகை மாதம் என்பதால் மலிவான விலையில் மீன்களை வாங்கி சென்ற மீன் பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

களைகட்டிய நாகை மீன்பிடி துறைமுகம்...

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து, கடந்த 15 நாட்களாக மேலாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் இன்று அதிகாலை கரை திரும்பினர். இதனால் 15 நாட்களுக்கு பிறகு மக்கள் கூட்டத்தால் நாகை மீன்பிடி துறைமுகம் நிரம்பி வழிந்தது.

மேலும் படிக்க | கூட்டம் கூட்டமாக குவியும் சுற்றுலா பயணிகள்...

மலிவான விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கி சென்றனர். கார்த்திகை மாதம் என்பதால், 1000 ரூபாய்க்கு விற்பனையான வஞ்சரம் மீன் 600 ரூபாய்க்கும், வாவல் மீன் 650 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்பனையான இறால் கிலோ 250 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனையான நண்டு கிலோ 200 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க | தொடர்மழை காரணமாக நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளநீர்..குளிக்க தடை...