களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்... 19 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு...

19 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்ட மாட்டு வந்து பந்தயத்தை திரளானோர் கண்டு களித்தனர்.

களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்... 19 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்பு...

புதுக்கோட்டை | திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில்  மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 19ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

போட்டி பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 06 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு  போக வர 12 கிலோ மீட்டர் தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு போக வர 9 கிலோமீட்டர் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.

இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட  மாட்டு வண்டிகள் சாலையில் துள்ளிக்குதித்தும் ஒன்றையொன்று முந்திச்சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. போட்டியை காண்பதற்காக சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சமாட்டு வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | முதலமைச்சர் பிறந்தநாளை ஒட்டி மாட்டு வண்டி பந்தயம்...