இந்து கடவுளர்கள் படம் எங்கே?... கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!!!

இந்து கடவுளர்கள் படம் எங்கே?... கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்!!!

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  

கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இந்து ஆர்வலர்கள் சிவனடியார்கள் பங்கேற்றனர்.  கூட்டம் தொடங்கியவுடன் சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை கூட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவரை தொடர்ந்து பல்வேறு இந்து ஆர்வலர்களும் கடவுள் படம் வைக்க கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினரிடைய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.  அதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்கிடையில் இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று தற்போது மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கடவுள் படம் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:     ”பயிற்சியாளர்கள் மிக முக்கியம்....” உதயநிதி ஸ்டாலின்!!