மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி...

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி...
Published on
Updated on
1 min read

தருமபுரி | கொலவள்ளி அருகே காட்டு யானை ஒன்று உணவு தேடி கிராம பகுதிக்குள் வந்திருந்தது. அப்போது பொதுமக்கள் விரட்டியபடி சென்றனர். இதனால், அங்கும் இங்கும் ஓடிய யானை, ஏரிக்கரையில் இருந்து, மேட்டுப் பகுதிக்கு ஏற முற்பட்டது. அப்போது, தாழ்வாக சென்ற உயர்மின் அழுத்த கம்பி, உரசியதில், மின்சாரம் தாக்கி காட்டு யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. 

கடந்த 10 நாட்களுக்கு முன் உணவு தேடி வந்த மூன்று காட்டு யானைகள், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்தன. இந்த நிலையில், தற்போது மின்சாரம் தாக்கி மற்றும் ஒரு யானை உயிரிழந்துள்ளது விலங்கின ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com