சொத்து பிரச்சனையால் மண்வெட்டியால் தாக்க வந்த பெண்...! வெளியான வீடியோ காட்சி...!

சொத்து பிரச்சனையால் மண்வெட்டியால் தாக்க வந்த பெண்...! வெளியான வீடியோ காட்சி...!

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(38). இவரது உறவினரான ராஜேந்திரன் என்பவரின் மகள் கௌதமி(28) என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜெகன் வயலில் வேலை பார்க்கும் போது கௌதமி அரிவாள் எடுத்துக் கொண்டு வயலில் வெட்ட வந்ததாகவும் தகாத வார்த்தைகள் கூறி திட்டியுதாகவும் காவல் நிலையத்தில் ஜெகன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜெகன் மற்றும் அவருடைய மனைவி சரண்யா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது புதுக்குடி என்ற கிராமத்தில் கௌதமி மண்வெட்டியால் தாக்கம் வந்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சி முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் கௌதமி ஜெகனை தாக்கியதாக கூறி நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜெகன் மற்றும் கௌதமி இருவருமே குடவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.