பீர் பாட்டில்களை உடைத்து முற்றுகை செய்த பெண்கள்...
செஞ்சி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பெண்கள் பீர் பாட்டில்களை உடைத்து முற்றுகை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் | செஞ்சி அடுத்த செம்மேடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பில் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் கடை இருப்பதால் அகற்றக்கோரி கடந்த ஒரு வார காலமாக பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கடை விற்பனையாளரிடம் முற்றுகை வைத்து உள்ளே இருந்த பீர் பாட்டில்களை எடுத்து உடைத்த போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே - வாழ்த்தோடு இபிஎஸ்க்கு வகுப்பெடுத்த திருமா!
அங்கு கோவில் வளாகங்கள், அரசு பள்ளிகள் இருப்பதால் மாணவ மாணவிகள் பள்ளிக்குசென்று வருவதற்கு சிரமமாக இருப்பதால் இந்த முற்றுகை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
முற்றுகை செய்த பெண்கள் கடையில் உள்ள இருந்த பீர் பாட்டில்களை எடுத்து கடையின் முன்பு உடைத்ததால் பரபரப்பு நிலவியது. இந்த பரபரப்பினால் கடையின் விற்பனை ஆளர் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிச்சதுக்கே 500 போலீஸ் காவலா?