சாப்பிட போன கடையில் இறைச்சியில் புழுக்கள் - உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ்

நாமக்கல் பரமத்தி சாலையில் கோல்டன் தாபா என்ற பெயரில் செந்தில்குமார் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு நேற்று சீனிவாசன் என்பவர் நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார்
சாப்பிட போன கடையில் இறைச்சியில் புழுக்கள்   - உரிமையாளரிடம் உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ்
Published on
Updated on
1 min read

 அவர்கள் சிக்கன் லாலிபாப் வாங்கியுள்ளார். அதனை சாப்பிட முற்பட்ட போது கோழி இறைச்சியில் புழுக்கள் இருந்ததோடு அது கெட்டுப் போனதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர் உணவகத்தின் உரிமையாளரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியான பதில் அளிக்காததால் கெட்டுப் போன கோழி இறைச்சி மற்றும் சமையலறையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து இன்று நாமக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி  கோல்டன் தாபாவில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் உணவகத்தில் இருந்த குளிர்சாதன பெட்டி சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசியது கண்டறியப்பட்டது.

மேலும் அதில் பழைய கோழி இறைச்சி இருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து 5 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்தும், நேற்று சமைத்த 5 கிலோ கோழி இறைச்சியை பெனாயில் ஊற்றி அழித்தனர். அதுமட்டுமின்றி இதுகுறித்து விளக்கம் கேட்டு உணவக உரிமையாளர் செந்தில்குமாருக்கு நோட்டீஸ் வழங்கினர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com