உல்லாசமாக சுற்றித் திரியும் கரடி மற்றும் யானை...

பொது மக்கள் இருக்கும் பகுதிகளைச் சுற்றி, யானையும் கரடியும் உல்லாசமாக உலா வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உல்லாசமாக சுற்றித் திரியும் கரடி மற்றும் யானை...

திருநெல்வேலி : அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. மேலும் அவ்வப்போது அடிவாரப்பகுதிகளுக்கு இவை கீழே இறங்குகின்றன. 

இந்த நிலையில் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி நடமாட்டம்  தொடர்ந்து அவ்வப்போது இருந்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள பகளாமுகி கோவிலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் கோவில் வளாகத்தில் கரடி சுற்றி திரியும் காட்சி பதிவாகியுள்ளதுதற்போது இந்த காட்சியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

மேலும் மணிமுத்தாறு அருகேயுள்ள பொட்டல் என்ற கிராமத்தின் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடந்த சில நாட்களாக தந்தத்துடன் கூடிய ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்குகிறது. தற்போதும் அந்த யானை சுற்றித்திரியும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com