குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி...

கோத்தகிரி பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வரும் கரடியால் பொதுமக்கள் அச்சமடிந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி...
Published on
Updated on
1 min read

நீலகிரி | கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக் காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர். இந்நிலையில் கோத்தகிரி  பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் ஒரு வீட்டில் சர்வ சாதாரணமாக தொடர்ந்து உலா வருகின்றன.

அங்குள்ள சிசிடிவி காட் சியில் பதிவாகியிள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே செல்ல மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

எனவே அடிக்கடி குடியி ருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை வனத்துறை இடம் முறைட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் விரைவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

எனவே வனத்துறை அதிகாரிகள் இது குறித்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com