சோளக்காட்டை சேதப்படுத்திய காட்டுயானைகள் கூட்டம்...! விரட்டும் பணி தீவிரம்...!

சோளக்காட்டை சேதப்படுத்திய காட்டுயானைகள் கூட்டம்...! விரட்டும் பணி தீவிரம்...!

கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் 5 திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் யானை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பேரூர் அடுத்த பச்சாபாளையம் பகுதியில் அதிகாலையில் நுழைந்த ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சோளக்காட்டுக்குள் புகுந்து சேதப்படுத்திய நிலையில் தற்போது யானைகள் அதே பகுதியில் முகாமிட்டுள்ளன. அதனால் அருகில் உள்ள குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரத்தில் காட்டு யானைகளை விரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் தொடர்ந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com