திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கோகுல் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வேல் குமார்(42). இவர் பை-பாஸ் சாலை பகுதியில் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்து கடையை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடைக்கு வேல்முருகன் சென்றுள்ளார். வேல் குமாரின் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் வேல் குமார் வீட்டின் அருகில் மர்ம நபர் ஒருவர் இருப்பதாக எதிர் வீட்டில் வசிக்கும் பாபு என்பவர் வேல் குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு விரைந்து வந்த வேல் குமார் வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, காலை 9:30 மணிக்கு வீட்டின் மதில் சுவர் மீது அடையாளம் தெரியாத முகமூடி அணிந்து பெண் உருவத்தில் புடவை அணிந்த நபர் உள்ளே வந்து வெளியே ஓடும் காட்சிகள் பதிவாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வேல் குமார் திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண் உருவத்தில் திருட வந்த மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.