சுற்றுலா பயணிகளை கவரும் ஓவிய கண்காட்சி....! கேரள ஓவியர்கள் அசத்தல்...!

சுற்றுலா பயணிகளை கவரும் ஓவிய கண்காட்சி....! கேரள ஓவியர்கள் அசத்தல்...!

Published on

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கேரள ஓவியர்களின் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இதில் கேரளாவை சேர்ந்த 23 ஓவியர்களின் 75 ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

நீலகிரி மாவட்டம், சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் இங்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலாத்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில் உதகையில் உள்ள சோலோ ஆர்ட் கேலரியின் சார்பாக சேரிங்கிராசில் ஓவிய கண்காட்சி துவங்கியது. இன்று முதல் பொங்கல் வரை நடைப்பெற உள்ள இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முழுக்க முழுக்க கேரள ஓவிய கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. மாடர்ன் ஆர்ட், அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட், கான்டெம்பரி ஆர்ட் என பல்வேறு ஓவியங்கள் முழுக்க முழுக்க கேரளாவை காட்சி படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள 23 ஓவியர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அனைவரும் பகுதி நேர ஓவியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com