புள்ளினங்காள்.. வெடிகள் இல்லை... இனி உங்கள் கூவும் குரல் மட்டும் தான்...

தீபாவளி பண்டிகையின்போது, பறவைகளுக்கு தொந்தரவு அளிப்பதை தடுக்கும் வகையில், தமிழகத்தின் சில கிராமங்களில் பல ஆண்டுகளாக வெடி வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
புள்ளினங்காள்.. வெடிகள் இல்லை... இனி உங்கள் கூவும் குரல் மட்டும் தான்...
Published on
Updated on
1 min read

பல்லடம் அருகே பறவைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்காக 10 வருடங்களாக தீபாவளிக்கு  பட்டாசு வெடிக்கமால் கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் ஆறாக்குளம் கிராமத்தில்  200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பறவைகளை காக்க 10 ஆண்டுகளாக வெடிப்பதில்லை:

இயற்கை எழில் சூழ்ந்த  ஆறாக்குளம் பகுதியில் மரங்கள் நிறைந்து காணப்படுவதால், பறவைகள் அதிகளவில் கூடுகட்டி வசித்து வருகின்றன. பறவைகளை தொந்தரவு செய்யாத வண்ணமும், சுற்றிச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணமும், கடந்த 10 வருடங்களாக தீபாவளியில் பட்டாசு வெடிக்காமல் இருந்து வருகின்றனர்.

ஆலமர பறவைகளுக்காக வெடி வெடிக்காத கிராம வாசிகள்:

அனைத்து மக்களையும் திரட்டி போட்டிகளை நடத்தியும், மரக்கன்றுகள் நட்டும், தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் வி.பி. குப்பம் கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறைகளாக ஆலமரத்தில் வாழ்ந்து வரும் பறவைகளுக்காக தீபாவளி அன்று வெடி வெடிப்பதை புறக்கணித்து வருகின்றனர். தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பதை தவிர்த்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com