குடுகுட்பைக்காரர் வேடமிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்...

வேளாண்மைத் துறையை கண்டித்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் குடுகுடுப்பைக்காரர் வேடமிட்டு குடுகுடுப்பை அடித்து குறி சொல்லி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடுகுட்பைக்காரர் வேடமிட்டு விவசாயிகள் நூதன போராட்டம்...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட வேளாண்துறையை கண்டித்து கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குடுகுடுப்பைகாரர்கள் போன்று வேடம் அணிந்து குடுகுடுப்பை ஆட்டி குறி சொல்லி நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை துறையில் அதிகாரிகளுக்கு 2000 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தேவையான மானியங்கள் இடுபொருட்கள் கொடுப்பதாகவும், மாவட்டம் முழுவதும் உரம்யூரியா தட்டுப்பாடு நிலவுவதாகவும், வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கத்தி ஆர்பாட்டம் செய்தனர்.

மேலும் படிக்க | தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் வாங்கிய விவசாயிகள்...

மேலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிதி ஒதுக்கினாலும் கூட இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என மனுக்கள் தள்ளுபடி செய்வதாகவும் கூறி  விவசாய சங்கத்தினர் குடுகுடுப்பைக்கார்ர் போன்று வேடம் அணிந்து குடுகுடுப்பு ஆட்டி ஜக்கம்மா செல்லரா ஜக்கம்மா சொல்லரா என்று நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விவசாயிகள் மை வைத்துக் கொண்டு அதிகாரிகளிடம் சென்று மனு அளித்தால் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் சித்தரித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | சிதம்பரம் : தமிழக பாஜக தலைவருக்கு எதிராக உருவ பொம்மையை எரித்து போராட்டம்...!