பாலியல் வழக்கில் சென்னையில் பிடிபட்ட கேரள வாலிபர்...

பாலியல் வழக்கில் தேடப்பட்ட கேரள வாலிபர் சென்னையில் பிடிப்பட்டார். இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வழக்கில் சென்னையில் பிடிபட்ட கேரள வாலிபர்...

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்தவர்களின் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

அப்போது கேரளாவை சேர்ந்த ஜோபின் ஜோஸ்(35) என்பவரின் பாஸ்போர்ட் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது இவரை பாலியல் வழக்கில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேடி வருவதால் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் தந்து இருந்ததை கண்டு பிடித்தனர். அவரை வெளியில் விடாமல் ஒரு அறையில் தங்க வைத்தனர். 

இது பற்றி கேரளா ஆலப்புழா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆலப்புழாவில் இருந்து  தனிப்படை போலீசார் சென்னை வந்து ஜோபின் ஜோசை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com