9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...

அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை காவலில் எடுத்து விசாாிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
9 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...
Published on
Updated on
1 min read

விழுப்புரம் | குண்டலப்புலியூர் எங்கு வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார் அளித்து அன்பு ஜோதி ஆசிரமம் நிர்வாகி ஜூபின் பேபி அவரது மனைவி மரியா உள்ளிட்ட 9 பேர் கெடார் காவல்துறையின் மூலம் கைது செய்யப்பட்டன பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டன.

கடந்த 23ஆம் தேதி சிபிசிஐ போலீசார் அன்பு ஜோதி ஆசிரமம் நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை  காவலில் மூன்று நாள் எடுத்து விசாரிக்க அனுமதி கூறின அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றன.

இதற்காக கடலூர் மற்றும் வேடம்பட்டு சிறையில் இருந்த நிர்வாகி ஜூபின் பேபி உள்ளிட்ட 8 பேர் இன்று அழைத்து வரப்பட்டன விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டன. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பாராணி தலைமையில் நடைபெற்றது.

இதில் குற்றம் சாட்டப்பட்ட அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி சூப்பின் பேபி அவரது மனைவி மரியா, ஆசிரம பணியாளர்கள் பி ஜி மோகன், கோபிநாத், ஐயப்பன், முத்துமாரி, பூபாலன், சதீஷ் ஆகிய எட்டு பேரும் சிபிசிஐடி போலீசார் இன்று முதல் வரும் 28ஆம் தேதி காலை 10 மணி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பாராணி உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்பு உடன் போலீஸ வாகனத்தில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டன.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com