சென்னையில் நடந்த “லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்”...

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், “லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்” சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி பங்கேற்றனர்.
சென்னையில் நடந்த “லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாக்கத்தான்”...

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு லஞ்ச ஒழிப்பு  குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில்  வாக்கத்தான்  நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி கலந்து கொண்டு விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வாக்கத்தானில் பங்கேற்றார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் வாரம் தேசிய லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. முன்னிட்டு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அரசு துறைகளில் சார்பிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அந்த வகையில் இன்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பார்த்து முன்னிட்டு வாக்கத்தான நிகழ்ச்சி நடைபெற்றது.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com