இனி டிக்கெட் எடுக்க லைனில் நிற்க வேண்டாம்... கியு. ஆர் கோட் போதும்!!!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் டிக்கெட் எடுக்கும் செயலி (QR CODE செயலி) துவக்கப்பட்டது.
இனி டிக்கெட் எடுக்க லைனில் நிற்க வேண்டாம்... கியு. ஆர் கோட் போதும்!!!
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை | அரக்கோணம் ரயில் நிலையத்தில் செங்குட்டுவன் மற்றும் அப்துல் கலாம் சாரணர், மணிமேகலை மதர் தெரசா சாரணியர் இயக்கம் தென்னக ரயில்வே மத்திய மாவட்டம் இணைந்து பயண சீட்டு செயலியை செங்குட்டுவன் சாரணர் இயக்க குழு தலைவர் குமாரசாமி தலைமையில், அப்துல் கலாம் சாரணர் இயக்க குழு தலைவர் திலீப் குமார் முன்னிலையில்  அறிமுகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பயண சீட்டு முதன்மை அலுவலர் காதர் ஷெரிப், ஸ்டேஷன் மாஸ்டர் சுபாஷ் குமார், ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயிலில் பயணிப்பதால் டிக்கெட் எடுப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் ரயில் டிக்கெட் எடுக்கும் செயலி(QR CODE) அறிமுகம் செய்து துவக்கி வைத்தனர்.

இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட்டை தவிர்த்து புறநகர் மின்சார ரயில், சாதாரண ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை ரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டர்க்குள் செயலியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் ரயில் நிலைய வளாகத்திற்குள் 9 இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது என சாரண சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் ரயில் பயணிகளிடம் விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com