100 க்கும் மேறப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூடிய போராட்டம்...

முறையான ஊதியம் வழங்கக்கோரியும், ஆலை தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் நூற்ப்பாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 க்கும் மேறப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கூடிய போராட்டம்...

தமிழகத்தில் கூட்டுறவு நூற்பாலை ஆறு இடங்களில் இயங்கி வருகிறது அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இவ்வாலையில் நிரந்தர பணியாளர்கள் 72 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 300க்கு மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர்.

ஆலையிலிருந்து மாதந்தோறும் சுமார் 200 டன் நூல் நூற்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் ஆலை நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் நிர்வாகத்தினர் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நாள் ஊதியம் ரூ 420 ஐ பாதியாக குறைத்து வழங்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் நாள் ஊதியம் போன்று அல்லாமல் வேலையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதனால் ஆந்திரமடைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு நூற்ப்பாலை முன்பாக  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது! ஏற்கனவே பழைய முறைப்படி ஊதியம் வழங்க வேண்டும்! எனக் கூறி கோஷங்களை எழுப்பி நூற்பாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com