தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள்... தீவிரமாக தேடும் வனத்துறையினர்...

மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு யானைகளின் குட்டி யானைகள் எங்கு இருக்கின்றன என்பது குறித்து தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் தீவிரமாக ஈருபட்டுள்ளனர்.

தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள்... தீவிரமாக தேடும் வனத்துறையினர்...

கிருஷ்ணகிரி | மாரண்டஹள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி இரண்டு பெண் யானைகள் மற்றும் ஒரு மக்னா யானை உயிரிழந்தன. இதனால் இரண்டு குட்டி யானைகள் தாயை இழந்தன.

இந்த குட்டிகள் வனப்பகுதிக்குள் சென்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் இணைந்ததா? என்பது இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டியானைகள் எங்கு இருக்கின்றன என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க | 40 அடி கிணற்றில் விழுந்த 2 கரடிகள்... 8 மணி நேரமாக போராடிய அதிகாரிகள்...

தாயைப் பிரிந்த இரண்டு குட்டி யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாரண்டஹள்ளி காப்புக்காடுகள் மற்றும் காளிகட்டா வனப்பகுதியில் சுற்றித்திரிகிறதா? என
தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், பாலக்கோடு வனத்துறையினருடன் இணைந்து தேடி வருகின்றனர். 

குட்டி யானைகளை புகைப்படம் எடுத்து அவற்றை நீிதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், கடந்த சில நாட்களாக இரவு, பகலாக தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை விரட்டிய அதிகாரிகள்...