உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிய படுகர்...

நீலகிரியில் படுகர் இன மக்களின் உப்பு ஹட்டுவ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உப்பு ஹட்டுவ பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடிய படுகர்...
Published on
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கடைகம்பட்டி, ஜக்கலோடை மற்றும் 400 கிராமங்களில்  படுகர் இன மக்கள்  உப்பு ஹட்டுவ’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து கிடைத்த தண்ணீரை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.

இதையடுத்து அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர். இதன் மூலம் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம். 

மேலும் உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கை நிலவுகிறது. பின்னர் வீட்டில் பாயாசம் தயாரித்து தங்கள் ஊரில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி மழை பொழிந்து ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது..

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com