வாழைக்காய் விலை உயர்வு....! விவசாயிகள் மகிழ்ச்சி....!

வாழைக்காய் விலை உயர்வு....! விவசாயிகள் மகிழ்ச்சி....!
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம் ,நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்காக காவல்கிணறு தினசரி சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.  கடந்த சில நாட்களாக அதிகளவு வாழைத்தார்கள் வந்ததால் விலை குறைந்து காணப்பட்டது. 

இந்நிலையில் இன்று சந்தைக்கு வந்த வாழைத்தார்கள் குறைவாக இருந்ததால் விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது சபரிமலை சீசன் என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.  சென்ற வாரம்  300 ரூபாய்க்கு விற்பனையான நாட்டு வாழை தார் 600 ரூபாய்க்கும் , 500 ரூபாய்க்கு விற்பனையான மட்டி வாழைத்தார் 800 ரூபாய்க்கும்,  400 ரூபாய்க்கு விற்பனையான ரசக்கதளி 700 ரூபாய்க்கும்,  600 ரூபாய்க்கு விற்பனையான   செவ்வாழை தற்போது 900 முதல் 1100 ரூபாய்க்கும்  விற்பனையானதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com