20 நாட்களாக போக்கு காட்டிய கரடி...

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடி கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.

20 நாட்களாக போக்கு காட்டிய கரடி...

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் காட்டெருமைகள் கரடி சிறுத்தை புலி கருஞ்சிறுத்தை மான் போன்ற பல விலங்குகள் அதிகம் உள்ள பகுதியாகும்,

இந்நிலையில் சமீப காலமாக சேலாஸ், நான்சச்,கிளன்டேல், போன்ற பகுதிகளில் கரடிகள் இரவு வேலையில் பள்ளிகளின் சமையலறை மற்றும் வகுப்பறைகள் கதவுகளை உடைத்து அரிசி முட்டை எண்ணெய் போன்ற பொருட்களை அடிக்கடி சேதப்படுத்தி வந்தது,

மேலும் படிக்க | மீண்டும் உலா வந்த படையப்பா யானை... மக்கள் அதிர்ச்சி...

இந்நிலையில் சேலாஸ் அருகே உள்ள பில்லிமலை தனியார் தேயிலை எஸ்டேட் குடியிருப்பு பகுதி மற்றும் பள்ளியில் அடிக்கடி தொந்தரவு செய்து வந்த கரடியை பிடிக்க குன்னூர் வனத்துறையினர் கூண்டு ஒன்றை கடந்த 20 நாட்கள் முன்பு வைத்தனர்,

நிலையில் சிக்காமல் போக்கு காட்டி வந்த கரடி  கூண்டில் சிக்கியது குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் லோகேஷ் விக்ரம் சீனிவாசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறை ஆதி விரைவுப்படை ஆகியோர் கூண்டில் சிக்கிய கரடியை பிக்கப் வாகனம் மூலம் எடுத்துச் சென்று முதுமலை தெப்பக்காடு வனப்பகுதியில் பத்திரமாக இறக்கி விட்டனர். 

மேலும் படிக்க | மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட காட்டு யானை...