உயர் மின்சார டவர் மீது ஏரிய சிறுவனால் பரபரப்பு...
ஆவடி அருகே உயா் மின்னழுத்த கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள ஒரு உயர் அழுத்த மின்சார டவர் மீது சிறுவன் ஒருவன் ஏரி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்கள் மத்தியில் மிரட்டல் விடுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் அந்த சிறுவனை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் அந்த சிறுவன் மோரை நியூ காலனி பகுதியை சேர்ந்த 15 வயதான தயாளன் என்பதும், திருமுல்லைவாயலில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருவதும் வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | காவலர்களால் சுட்டு தள்ளப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்...
மேலும் அவர் சரிவர படிக்காததால் வீட்டில் கண்டித்தாலும் செல்போன் வாங்கி தர, தாய் சுமதி மறுத்ததாலும் மின் கோபுரம் மேல் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
பலமுறை அவரை கீழே இறங்க சொல்லியும் அவர் இறங்காததால் தற்போது தீயணைப்புத் துறையினர் லாவகமாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மெதுவாக, மேலே ஏறிச் சென்று அவரை கீழே கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு 100கும் அதிகமான மக்கள் குவிந்து இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிறந்த நாளில் உயிரிழந்த நடன கலைஞர்...!