தாயின் பணியை வழங்க கோரி மகள் வழக்கு...

முன்களப்பணியாளராக பணியாற்றி கொரோனா தொற்றால் உயிரிழந்த தாயின் பணியை வழங்க கோரி மகள் தொடர்ந்த வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
தாயின் பணியை வழங்க கோரி மகள் வழக்கு...
Published on
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா "தனக்கு பணி வழங்க மறுத்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன்,  "மனுதாரரின் தாயார் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். கொரோனா காலத்தில் முன்கள பணியாளராக பணியாற்றிய நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மனுதாரர் கணவரை இழந்தவராக உள்ளார்.

மனுதாரருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது தாயின் பணியினை 43 வயதான தனக்கு வழங்கக்கோரியும், வயது தளர்வு கோரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.இருப்பினும் மனுதாரர் அருந்ததியர் சமூகத்தினை சேர்ந்தவர், கணவரை இழந்தவர், அவரே தனது இரண்டு குழந்தைகளை கவனித்து வருகிறார்.

மனுதாரரின் சகோதரியும், தாயாரும் முன் களப்பணியாளர்களாக இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த காரணங்களை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு வயது தளர்வு வழங்குவது குறித்து 12 வாரங்களுக்குள்ளாக தமிழக குடிநீர் வழங்கல் மற்றும் நகர நிர்வாகத்துறை செயலாளர் முடிவெடுக்க வேண்டும்.

வயது தளர்வு வழங்கப்படும் பட்சத்தில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மனுதாரருக்கு பணி வழங்க வேண்டும். வயது உயர்வை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இந்த வழக்கை சிறப்பு வழக்காக கருதி முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com