திருநெல்வேலி | தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை சார்பில் வேலூரில் இன்று நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி நெல்லை மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் படி, ரூ 29 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுமான பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் நெல்லை மாவட்ட திட்ட அதிகாரி சுரேஷ் கலந்து கொண்டு, கட்டுமான பணிகளுக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். மேலும் வகுப்பறை கட்டுமான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
இதில் நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் மற்றும் ஆசிரியர்கள், யூனியன் அலுவலக ஊழியர்கள், மாணவ-மாணவிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.