
சிவகங்கை | தேவகோட்டை அருகே மாவிடுதிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜான் மகன் ரூபன் (20) இவர் திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
வழக்கம்போல் காலை வீட்டிலிருந்து கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை செல்லும்போது ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ரூபனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சாலையில் விழுந்ததில் கல்லூரி மாணவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் அதிவேகமாக அவ்விடத்தை விட்டு தப்பி சென்றது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் கல்லூரி மாணவன் ரூபனையும் மீட்டு தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா காவல்துறையினர் நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வேகத்தால் மக்கள் உயிரிழந்த சோகம்...