
புதுச்சேரியில் பேரிடர் கால மீட்பு மற்றும் நிவாரணம் குறித்து தன்னார்வலர்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை நடைபெற்றது.
பேரிடர் மீட்புப் பயிற்சி
பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களை ஈடுபடுத்துவதற்காக புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பேரிடர் கால நண்பன் பயிற்சி கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டது.
காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்று வரும் இப்பயிற்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பேரிடர் பற்றியும் பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குதல் பற்றியும் விரிவான செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
விழிப்புணர்வுப் பேரணி
இதன் ஒரு பகுதியாக 60 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பேரிடர் காலத்தில் செயல்பாடுகள் குறித்து பதாகைகள் ஏந்திய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. காமராஜர் மணி மண்டபத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி புதுச்சேரியின் முக்கிய வீதிகளின் வழியே கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகே சென்று மீண்டும் காமராஜர் மணிமண்டபத்திற்கு வந்தடைந்தது. முன்னதாக இந்த பேரணியை மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) தமிழ்ச்செல்வன் கோடி அசைத்து துவக்கி வைத்தார்.