கேரட் சாகுபடியில் ஆர்வம் காட்டிவரும் விவசாயிகள்...!

கேரட் சாகுபடியில் ஆர்வம் காட்டிவரும் விவசாயிகள்...!

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி மாவட்டத்தில் 5000 ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவில் காய்கறி பயிர்களான உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோஸ், பீட்ரூட், பூண்டு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் உதகை சுற்று வட்டார பகுதிகளான கேத்தி, எம்.பாலாடா மற்றும் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளன. 

இந்நிலையில் தற்போது உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழை மற்றும் இதமான காலநிலையால் கேரட் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது உதகை மார்க்கெட் சந்தைக்கு கேரட் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ கேரட் ரூ.52 க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com