நாயை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு குவியும் பாராட்டுகள்...

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாய் உயிருடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
நாயை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு குவியும் பாராட்டுகள்...

புதுக்கோட்டை : கறம்பக்குடி அருகே மீனம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி இவருடைய நாய் ஒன்று வீட்டின் அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது இதை கண்ட கந்தசாமி உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்த குமரேசன் தலைமையிலான கந்தர்வக்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 60அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாயை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

நாயை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com