முதன்முதலாக நடந்த சர்வதேச பூனை கண்காட்சி...

சேலத்தில் முதல்முறையாக சர்வதேச அளவிலான பூனைகள் கண்காட்சி இன்று நடைபெற்றது.

முதன்முதலாக நடந்த சர்வதேச பூனை கண்காட்சி...

கேட் கிளப் ஆப் இந்தியா சார்பில் சேலத்தில் முதல் முறையாக சர்வதேச அளவிலான பூனைகள் கண்காட்சி இன்று நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான இனங்கள் என 150 வகை பூனைகள் கண்காட்சியில் பங்கேற்றன.

மேலும் படிக்க | சுத்துவதற்கு முன்பே...கழன்று விழுந்த போல்ட்...பிறகு நடந்தது என்ன?

நடுவர்களாக பெங்களூரு சுதாகர் பாபு மற்றும் அன்னி தெரசா கேரோல் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த பூனைகளை தேர்வு செய்து சான்றிதழ், கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்த கண்காட்சியில் இடம் பெற்ற சில பூனைகள் சிறுத்தை புலி குட்டியை போன்று தோற்றம் இருந்தது.

மேலும் படிக்க | “ஆளுநர் தமிழ்நாடு என கூறுவது மக்களின் வெற்றி” - அமைச்சர் ரகுபதி...

கண்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் வித்தியாசமான தோற்றங்களில் இருந்த பூனைகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அத்துடன் தங்களை கவர்ந்த பூனைகளை செல்போனில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

குறிப்பாக செல்லப் பிராணிகள் மீது அதிகளவு ஈடுபாடும் அன்பும் உடைய பலர் வெகுநேரம் இந்த கண்காட்சியில் இருந்து பூனைகளை ரசித்தனர்.

மேலும் படிக்க | குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில்...ஆளுநர், முதலமைச்சர் வருவது போல நடந்த ஒத்திகை!