மீண்டும் களைக்கட்ட துவங்கிய மீன் பிடி திருவிழா...!!!

மீண்டும் களைக்கட்ட துவங்கிய மீன் பிடி திருவிழா...!!!
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள புதூர் கிராமத்தில் உள்ள பெரிய மற்றும் சின்ன கண்மாயில்  5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களைப் பிடித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் மீன்பிடித்து விழாவிற்கும் தரப்பட்டு வருகிறது.  ஜாதி மத பேதம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். 

கச்சா கூடை உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை பிடித்து வருகின்றனர்.  நாட்டு வகை மீன்களான கெண்டை கெளுத்தி விரால் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களைப் பிடித்து வருகின்றனர்.  இந்த மீன்பிடி திருவிழாவில் பிடிக்கும் மீன்களை யாரும் விற்க மாட்டார்கள்.  அதேபோல் அனைவரும் அவரது வீட்டில் எடுத்துச் சென்று சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து மகிழ்வது மீன்பிடி திருவிழாவின் முக்கிய நோக்கமாகும்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com