பூத்துக் குலுங்கும் கார்ஸ் புதர் செடிகள்... புல்வெளி பகுதிகளுக்கு பாதிப்பு...

பூத்துக் குலுங்கும் கார்ஸ் புதர் செடிகள்... புல்வெளி பகுதிகளுக்கு பாதிப்பு...

நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பல்வேறு தாவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.  இதில் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா தாய் நாட்டை தாயகமாக கொண்ட யூலக்ஸ் வகை தாவர இனத்தை சேர்ந்த கார்ஸ் வகை முட் புதர் செடிகளும் அடங்கும்.

இவ்வகை புதர் செடிகள் இலைகள் இன்றி முட்களை கொண்டு பச்சை நிறத்தில் வளர்வதோடு   ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பூக்கள் பூக்கும் செடியாகும்.

இவை கண்களை பறிக்கும் மஞ்சள் நிறத்தில் இருப்பதோடு தற்போது உதகை சுற்று வட்டார புல்வெளி காடுகளில் இவை அதிக அளவில் பூத்து காட்சியளிக்கிறது. 

இந்நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் சாலையோரங்களில் பூக்கும் பூக்கள் குறைந்து காணப்படும் நிலையில் தற்போது இந்த முட்புதர் செடியில் பூத்துள்ள பூக்களை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசிப்பதோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

மேலும் ஒரு காலத்தில் தேநீர் தயாரித்த இடமாக இந்த பகுதி கூறப்படுகிறது.  எவ்வாறு இருப்பினும் நீலகிரியின் சுற்றுச்சூழலுக்கு இந்த முட் புதர் செடி தீங்கிழைப்பதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com