பக்தர்கள் எடுத்துவந்த சர்ப்பக் காவடியை பறிமுதல் செய்த வனத்துறையினர்...

பொங்கல் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் எடுத்துவந்த சர்ப்பக் காவடியை, வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பக்தர்கள்  எடுத்துவந்த சர்ப்பக் காவடியை பறிமுதல் செய்த வனத்துறையினர்...

வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன்  படி கண்ணாடி பேழைக்குள் பாம்பினை அடைத்து எடுத்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடையை மீறி சர்ப்பக்காவடி எடுத்து வந்தால் மூன்று ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து பக்தர்கள் சர்ப்பக்காவடி எடுத்துவருவதை கண்காணிக்க திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் மற்றும்  வனச்சரக அலுலலர் கனிமொழி, தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகளில் ஈடுபட்டுவந்தனர்.

மேலும் படிக்க | திரு இருதய சி பி எஸ் இ பள்ளியில் கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழா...

அப்போது  நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியிலிருந்து வந்த, பாதயாத்திரை குழுவினர் சர்ப்பக்காவடி எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து  சர்ப்பக் காவடியை பறிமுதல் செய்த திருச்செந்தூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பக்தர்கள்  எடுத்து வந்த சர்ப்பக் காவடியை வனத்துறை  பறிமுதல் செய்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பல மணி நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி...