வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலிருந்து, கொருக்குப்பேட்டை ரங்கநாதன் அரசு குடியிருப்பு வாரியம் நோக்கி செல்லக்கூடிய பகுதியில் “புளு ஃப்ளேம்” என்ற, சமையல் எரிவாயு விநியோகம் செய்யும்
ஏஜென்சியின் சார்பில், லாரியில் சுமார் 80க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க | தொடர்மழையால் வெறிச்சோடிக் காணப்பட்ட ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி...
அப்போது அந்த பகுதியில் புதிதாக கட்டபட்ட மழைநீர் வடியால்வாய் மீது, லாரி ஓட்டூநர் மோகன் இயக்கி செல்ல, வடிகால்வாய் மூடியானது உடைந்து பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் லாரியின் பின்புற சக்கரம் மாட்டிக்கொண்டது. உடனடியாக ஓட்டுநர் மோகன் லாரியில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.
பின் தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலிசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் லாரியை ராட்சத கிரேன் உதவியோடு பள்ளத்திலிருந்து வெளியே எடுத்தனர். புதிதாக போடப்பட்ட வடிகால்வாய் முழுமையாக ஈரப்பதம் காயாமல் இருந்த நிலையில் அது உடைந்தது என தெரியவந்துள்ளது.
லாரி சிக்கிக்கொண்ட சம்பவத்தினால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொது மக்களுக்கு இடையூறும் ஏற்பட்டுள்ளது.