சாலை பணிக்கு இடையூராக கொட்டகை அமைத்த அரசு ஊழியர்...

பெரிய ராசாப்பட்டி பகுதியில் சிமெண்ட் சாலை பணிக்கு இடையூராக கொட்டகை அமைத்த அரசு ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை பணிக்கு இடையூராக கொட்டகை அமைத்த அரசு ஊழியர்...
Published on
Updated on
1 min read

கரூர் | குளித்தலை அருகே தோகைமலை ஒன்றியம் கழுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ராசாப்பட்டி கிராமத்தில் OHT டேங்க் முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் வரை மத்திய அரசின் 15வது நிதி குழு மானியத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 90 மீட்டருக்கு கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வரும் சகாதேவன் என்பவர் பெரிய ராசாப்பட்டி பகுதியில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் முன்புறம் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு குறுக்கே இடையூறாக ஆஸ்பெட்டாஸ் கூடாரம் அமைத்துள்ளார்.

இதனால் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஊராட்சி சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிக்கு இடையூராக அத்துமீறி கூடாரம் அமைத்த அரசு அலுவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com