ஆத்தாடி!!! எவ்வளவு பெரிய முட்டை... கின்னஸ் சாதனை பிடிக்கிறதா?

ஒரு கோழி முட்டை இவ்வளவு பெரிதாக இருக்குமா என அனைவரது கவனத்தையும் ஒரு முட்டை பெற்று வருகிறது.
ஆத்தாடி!!! எவ்வளவு பெரிய முட்டை... கின்னஸ் சாதனை பிடிக்கிறதா?
Published on
Updated on
2 min read

கோவை | குரும்பபாளையம் விவேகானந்தா நகர் பகுதியில் வசித்து வரும் அபுவின் மனைவி ஷாமிளா. எம்.. பட்டதாரியான இவர் கோழி வளர்ப்பதில் கொண்ட ஆர்வத்தால் தனது வீட்டிலேயே கூண்டுகள் அமைத்து கணவரின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார்இவர் வளர்த்து வரும் கோழிகளுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சத்தான தானியங்களை கொடுத்து வளர்த்து வருகிறார். இதனால் இவர்கள் வளர்த்து வரும் நாட்டுக்கோழி முட்டைகளை பலர் வீடு தேடி வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் ஷாமிளா அபு வளர்த்து வரும் கோழிகளில் ஒரு கோழி வழக்கத்திற்கு மாறாக நீளம், அகலம் மற்றும் எடை எல்லாம் அதிக அளவில் கொண்ட முட்டையை இட்டுள்ளதுநேற்று முன்தினம் இந்த முட்டையை கண்டெடுத்த ஷாமிளா முட்டையின் வித்தியாசத்தை கண்டு கூகுளில் விவரங்களை தேடி பார்த்துள்ளார்அப்போது இந்த முட்டையின் அதிக எடை மற்றும் நீளம் ஆகியவை உலக சாதனை முயற்சிக்கு செல்லும் என்பதை அறிந்து உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற முயற்சி செய்தார்.

இந்த முட்டை எப்படி கின்னஸ் சாதனைக்கு இடம் பெரும் என்ற தகவல்களைப் பற்றி அவர் கூறுகையில்,

“சாதாரணமாக கோழி முட்டையின் எடை 40 கிராம் முதல் 50 கிராம் வரை இருக்கும் நிலையில், இந்த கோழி முட்டையின் எடை 90 கிராமாக இருக்கிறது. மேலும், நீளம் 8.1 இன்ச், சுற்று வட்ட அளவு 6 இன்ச் உள்ளது. இந்த முட்டையின் எடை விகிதம் ஆச்சரியம் அளிக்கிறது.”

என கூறினார். ஒரு எம்.. படித்த பட்டதாரி, அதனை விட்டு, கோழி வளர்ப்பதை பார்த்து பலரும் நகைத்த நிலையில், இன்று எங்கள் வளர்ச்சியைப் பார்த்து ஆச்சரியப்படுவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் நம்மிடம் கூறும்போது,

“நான் வளர்க்கும் இந்த கோழிகளுக்கு வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்கும் சத்தான உணவுகளை கொடுக்கிறேன். கோழி வளர்ப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. அதைத்தாண்டி வளர்த்தேன். ஆனால் எனது கோழிக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. ஆரோக்கியமான உணவுகள் கொடுப்பதால் கோழி ஆரோக்கியமாக உள்ளது. இந்த கோழி வளர்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு பட்டதாரியான எனக்கு அரசு உதவ வேண்டும்”

என்றார்அதிசய கோழி முட்டையின் எடை உள்ளிட்ட அளவீடு தொடர்பாக ஷாமிளா ஓல்டு வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் -இல் இடம் பெற விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் ஓல்டு வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற உலகளாவிய சாதனை புத்தகத்தில் இருந்து ஷாமிளாவிற்கு விண்ணப்ப ஏற்பு செய்தி வந்துள்ளது. இது மின்னஞ்சல் வாயிலாக வந்துள்ளது.

அதில் "மிகப் பெரிய கோழி முட்டை"க்கான உங்கள் விண்ணப்பம் வெற்றியடைந்துள்ளது மற்றும் நீங்கள் இப்போது உலகளாவிய சாதனை புத்தகத்தின் தலைப்பு வைத்திருப்பவர் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com