அய்யோ..! இனிமே க்ரில் சிக்கன் சுத்துறத பாத்தாலே இது தானடா நியாபகத்துக்கு வரும்..

புதுச்சேரியில் பிரபல ஓட்டலில் சிக்கனை எலி ருசி பார்க்கும் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அய்யோ..! இனிமே க்ரில் சிக்கன் சுத்துறத பாத்தாலே இது தானடா நியாபகத்துக்கு வரும்..
Published on
Updated on
1 min read

சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக ஓட்டல்களில் விதவிதமாக உணவு வகைகளை தயார் செய்து அவர்களுக்கு வழங்குகின்றனர்.

ஆனால் பெரும்பாலான ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு ஓட்டலில் கிரில் சிக்கனை எலி ஒன்று ருசி பார்க்கும் சம்பவம் அரங்கேறி உள்ளது.

புதுச்சேரி நகரின் மையப் பகுதியான அண்ணா சாலையில் ஒரு ஓட்டலில் வழக்கம் போல வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட சென்றனர். அப்போது கடையிலிருந்த கிரில் சிக்கன் எந்திரத்தில் இருந்த சிக்கனை எலி ஒன்று ருசித்து உண்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிக்கனை எலி சாப்பிடுவதை செல்போனில் வீடியோ எடுத்து சமூகத்தில் பதிவிட்டனர். தற்போது அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் சிக்கன் சாப்பிடுவோர் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com