இரண்டு வாரம் தான் கால அவகாசம்!- மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு....

அரியலூர் மாவட்ட அட்சியருக்கு எதிரான புகார் தொடர்பாக் ஐரண்டு வாரங்கள் கால அவகாசம் கொடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு வாரம் தான் கால அவகாசம்!- மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு....

சாதிய வன்மத்துடன் செயல்படுவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான புகார் தொடர்பாக இரு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பட்டியலின வகுப்பு அலுவலர்களிடம் ஆதிக்கத்தை செலுத்தி வருவதாகவும் அவரது சாதிய அதிகாரப் போக்கு காரணமாக வட்டாட்சியர் தேன்மொழி என்பவர் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் மாத இதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

மேலும் படிக்க | 18 அம்ச கோரிக்கை: 3வது நாளாக தொடரும் வேலை நிறுத்த போராட்டம்...!

பல பட்டியலின அதிகாரிகளை அவர் பல்வேறு விதத்தில் துன்புறுத்தி வருவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | தென்காசி : மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு உதவிய ஆட்சியர்...!