இதற்கு இதுதான் முடிவா?!!

இதற்கு இதுதான் முடிவா?!!

Published on

காஞ்சிபுரம் அருகே ஆங்கிலம் பாடத்தில் சரியாக படிக்காததால் வகுப்பறையில் சக மாணவிகளிடையே அவமானப்பட்ட +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரஜினிகாந்த் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.  இவரின் இரண்டாவது மகள் தனிஷியா தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு, படித்து வந்தார்.  மாணவி தனிஷியா அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்ற நிலையில்,  ஆங்கிலப்பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற்றதால் ஆசிரியர் அவரை கண்டித்துள்ளார். 

இதனால் மனமுடைந்த மாணவி மாலை வீட்டுக்கு வந்த பின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கிட்டுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காஞ்சிபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து மாணவி அறையில் சோதனை செய்த போலீசார், மாணவி எழுதிய டைரியை கைப்பற்றினர்.  அதில் ஆங்கிலம் சரியாக பேச, எழுத வராததால் வகுப்பறையில் சகமாணவிகளின் முன்னிலையில் ஆசிரியர் திட்டியதாகவும்,  இதனால் ஐ ஆம் நோ ஹேப்பி என எழுதி வைத்து விட்டு தற்சொலை செய்து கொண்டது தெரியவந்தது.  மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com