வெள்ளி நீர்வீழ்ச்சியில் தமிழ் பலகைகள் வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை...

வெள்ளி நீர்வீழ்ச்சியில் தமிழ் பலகைகள் வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை...

வெள்ளி நீர்வீழ்ச்சியின் செல்ஃபி பாயிண்டில் அமைக்கப்பட்டிருந்த ஆங்கில பேர் பலகைகள் தமிழில் மாற்றப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Published on

இந்திய சுற்றுலாத் துறை சார்பில் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழும் வண்ணம் புதிய செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. இந்த செல்ஃபி பாயிண்ட் அருகே நின்று சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய சுற்றுலாத் துறை சார்பில் அமைக்கப்பட்ட இந்த செல்பி பாய்ன்ட்டில் இன்கிரடி பிள் இந்தியா என்ற ஆங்கில வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அமைக்கப்பட்ட இந்த செல்பி பாட்டில் ஆங்கில வாசகம் அமைக்கப்பட்டுள்ளது, சுற்றுலா பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக தமிழக சுற்றுலாப் பயணிகளிடம் இந்த வாசகம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது எனவே இந்த வாசகங்களை தமிழில் அமைக்க வேண்டும் என்றும், கொடைக்கானலை மையப்படுத்தி வாசகங்கள் அமைக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com