ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு...

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்பு...

கரூர் | குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதி கம்பம் ஊன்றப்பட்டது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

நேற்று குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து இன்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.

விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அய்யர் மலை சுற்றி உள்ள ஏராளமான பொதுமக்கள் தீமிதி திருவிழாவினை கண்டுகளித்தும் சுவாமி தரிசனம் செய்யும் வழிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா...