கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம்... குவிந்த பக்தர்கள் கூட்டம்...

காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கொட்டும் மழையில் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொட்டும் மழையிலும் கும்பாபிஷேகம்... குவிந்த பக்தர்கள் கூட்டம்...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை : ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பாத்தம்பட்டியில் காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் கட்டுமான பணி கடந்த மூன்று ஆண்டு காலமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பணி நிறைவடைந்தது. இதனை அடுத்து காமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா இன்று கொட்டும் மழையில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களாக கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வந்த புனித நீரை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்தனர்.

பின்னர் இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்ற சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் ராஜகோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காமாட்சி அம்மனுக்கு தீபாதாரணை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com