
சிவகங்கை | 47 வயதான மாணிக்கம் என்பவர் காரைக்குடி அருகி ஓ.சிறுவயல் சிவா நகரைக் சேர்ந்தவர். இவரும் இவரது மனைவியான 42 வயதான அடைக்கம்மை என்பவரும் கட்டுமான தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டின் அருகே வெளியே இருந்த விறகு அடுப்பில் உணவு சமைத்து கொண்டிருந்த போது அருகில் இருந்த முள்கம்பி வேலியில் சாய்ந்துள்ளார்.
மேலும் படிக்க | மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி சடலமாக மீட்பு...
அருகில் உள்ள மின்கம்பத்தின் இழுமான கம்பி வழியாக கம்பிவேலியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில் மின்சாரம் தாக்கி அடைக்கம்மை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடலை கைப்பற்றிய குன்றக்குடி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மாணிக்கம் கொடுத்த புகாரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.