கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு...

வந்தவாசியில் கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கெட்டுப்போன ஸ்வீட் விற்பனை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு...

திருவண்ணாமலை | வந்தவாசி தேரடி பகுதியில் இருக்கும் பேக்கரியில் ஸ்வீட் வாங்கி சாப்பிட்டவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் அதே கடையில் ஸ்விட்டை வாங்கி ஆய்வு செய்ததில் கெட்டுப்போன ஸ்வீட் என உறுதி செய்த  வீடியோ ஆதாரத்துடன் வெளியீடு.

வந்தவாசி தேரடி பகுதியில் லட்சுமி என்ற பெயரில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் ஆட்டோ ஓட்டுனர் பாபு என்பவர் தனது வாடிக்கையாளருக்கு ஸ்விட் வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க | பேருந்து கவிழ்ந்து விபத்து - 27 பேர் படுகாயம்...

அப்போது அந்த ஸ்வீட்டை சாப்பிட்ட பெண் குழந்தைக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அதே ஸ்வீட்டி சாப்பிட்ட ஆட்டோ ஓட்டுநர்ருக்கும் லேசான வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் மற்றும் சில நபர்களுடன்  அதே ஸ்வீட் கடைக்கு அழைத்துக் கொண்டு மீண்டும் ஸ்வீடை வாங்கி உள்ளார்.

ஆனால் அந்த ஸ்வீடில் கெட்டுபோன துர்நாற்றம் வீசுவதாக கடையில் வேலை செய்யும் நபரிடம் நேரடியாக வீடியோ ஆதாரத்துடன் கேள்வி கேட்டுள்ளார். மேலும் அந்த கடையில் இருந்த வாடிக்கையாளரிடமும் அந்த சுவீட்டை காட்டி கேட்டுள்ளார் .
அதற்கு கடைக்காரர் ஆமாம் கெட்டுப் போச்சு இப்ப என்ன பண்ண போற என்று கூறி கெட்டுப்போன ஸ்வீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை அனுப்பி விட்டனர்.

மேலும் படிக்க | போலி ஆவணங்கள் மூலம் கடன் வாங்கி மோசடி செய்த பலே கில்லாடி...

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற ஸ்வீட் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மெத்தனப் போக்கில் ஈடுபட்டு வருகின்றன இதனால் வாடிக்கையாளர்கள் கெட்டுப்போன ஸ்வீட்டை சாப்பிட்டு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

மேலும் கெட்டுப்போன ஸ்வீட்களை விற்பனை செய்து வரும் கடையின் உரிமையாளர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தவாசியில் உள்ள பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டால் கடைகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | புறாக்களை கொன்று சிக்கன் என விற்ற நபர்கள்... மும்பையில் நடந்த அவலம் அம்பலம்...