மன்னார்குடியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்...

சூரசம்ஹரத்தையொட்டி புகழ்பெற்ற கர்ணாவூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
மன்னார்குடியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண உற்சவம்...

திருவாரூர் : பெருகவாழ்ந்தானை அடுத்த கர்ணாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி ஆலயம் மிகவும் தொன்மைசிறப்புவாய்ந்த ஆலயம்.  இவ்வாலயத்தின் கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்தசஷ்டி விழாவின் சிறப்பு நிகழ்வாக இன்று மாலை சூரசம்ஹர விழா நடைபெறுகிறது. இதற்கு முன்பாக இன்று காலை  திருக்கல்யாணம் உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி ஸ்ரீவள்ளிதெய்வானை சமேதராக அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. மஞ்சள், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் முதலான நறுமணப்பொருட்களைக்கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க அம்மனுக்கு திருமாங்கல்ய கயறு அனுவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.  இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலிக்கும் முருகப்பெருமானை மனமுருக வழிபட்டனர்.

மேலும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துகொள்ளும் கன்னிப்பெண்களுக்கு திருமணம் விரைவில் கைகூடும் என்ற ஜதீகத்தின் பெயரில் கர்ணாவூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள திரளான கன்னிப்பெண்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com