எம்.ஜி.ஆர் சிலை சேதம்... அதிமுகவினர் போராட்டம்...

விருத்தாச்சலத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ,சிலை பாலவேலையின்போது பெயர்ந்து , விழுந்ததால்  ஒப்பந்ததாரரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல் செய்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எம்.ஜி.ஆர் சிலை சேதம்... அதிமுகவினர் போராட்டம்...

கடலூர் | விருத்தாச்சலம் ஆலடி ரோட்டில்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலை கடந்த 30 வருடங்களுக்கு,  முன்பு அப்பகுதியில் நிறுவப்பட்டது. இந்நிலையில் ஆலடி ரோட்டு பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி  நடைபெறும் நிலையில்,  ஜேசிபி இயந்திரத்தின் மூலம்பள்ளம் தோண்டும்  போதுஎம்ஜிஆர் சிலையின் பீடம்சேதமடைந்து, முற்றிலுமாக இடிந்து கீழே விழுந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த,  அ.தி.மு.கவினர், ஒப்பந்ததாரரின் அராஜக போக்கை  கண்டித்து,  விருதாச்சலம்-ஆலடி செல்லும் சாலையில், அமர்ந்து மறியல் போராட்டத்தில்,  ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விருதாச்சலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அ.தி.மு.கவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது சேதமடைந்த  எம்.ஜி.ஆர் சிலையை, புதுப்பித்து அதே இடத்தில் வைக்க வேண்டும் எனவும், ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தங்களது கோரிக்கையை,  புகாராக கொடுங்கள் என காவல்துறையினர் கூறினர்.

இதனையடுத்து அவர்கள், விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது காவல்துறையினர் ஒப்பந்ததாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உடனடியாக புதிதாக எம்ஜிஆர் சிலையை நிறுவ வேண்டும் என கூறினர். அதற்கு ஒப்பந்ததாரர் சம்மதித்ததால், அ.திமு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com