நள்ளிரவு முதல் மழை...சாலைகளில் தேங்கிய மழைநீர்!

நள்ளிரவு முதல் மழை...சாலைகளில் தேங்கிய மழைநீர்!

வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

புதுச்சேரியில் கனமழை

இந்நிலையில் புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி முதல் நகர மற்றும் கிராம பகுதிகளில் கனமழை மழை பெய்தது, மேலும் விடியற்காலை மழையின் அளவு சற்று குறைந்த நிலையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. நகரப் பகுதிகளில் நள்ளிரவு கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர் வெங்கடா நகர், கிருஷ்ணா நகர், பாவாணர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. 

மின்விநியோகம் நிறுத்தம்

இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர், தற்போது மழை குறைந்துள்ளதால் மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காற்றுடன் பெய்த கனமழை காரணமாக புதுச்சேரி நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் மின்விநியோகம் பல இடங்களில் நிறுத்தப்பட்டது. தற்போது பல்வேறு இடங்களில் மின்விநியோகம் சீரான நிலையிலே மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி உழவர் சந்தைக்கு வரக்கூடிய காய்கறிகள் வரத்து தாமதமானதால் உழவர் சந்தை வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com