மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை திறந்து வைத்த அமைச்சர்...

சீர்காழியில் பள்ளி கல்வித் துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை திறந்து வைத்த அமைச்சர்...

மயிலாடுதுறை | சீர்காழியில் தனியார் பள்ளியில் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க | காணொலி காட்சி மூலம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர்...

இதில் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டனர். சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், உதவி திட்ட அலுவலர் ஞானசேகர்,மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ஜெய்சங்கர், புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி...

இம்முகாமில் கண் காது மருத்துவர், மனநல மருத்துவர், உளவியல் மருத்துவர், உள்ளிட்ட மருத்துவர்கள் மாணவர்களை பரிசோதித்து தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை பெறுவதற்கான  தனித்துவம் வாய்ந்த திறன் அட்டை வழங்கப்பட்டது. இதில் ஆனந்த், அகிலண்டஸ்வரி, சண்முகவேல், சண்முகம், செல்வி, சுதாகர், மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | காலை உணவை சாப்பிட்டு பரிசோதித்த முதலமைச்சர்......