சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

புதுச்சேரி, காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தமிழ் சங்க கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கி வந்தது. இந்நிலையில் தொகுதிக்குட்பட்ட வெங்கட்ட நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் புதியதாக கட்டப்பட்டது. இந்நிலையில் புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு புதிய சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஷட்டில் கோர்ட்டில் சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துடன் முதல்வர் ரங்கசாமி இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.